my images

 

 

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா

தனது தமிழ் புது வருட வாழ்த்துக்களை தாய் நிலத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் வளலாய் உறவுகளுக்கு தெரிவிப்பதுடன் வரும் ஜய வருடம் எல்லோருக்கும் எல்லாக் கருமங்களிலும் ஜயம் அளிக்க எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையார் துணை நிற்க அவர் அருளை நாடுவோம்.

வளலாயில் இன்று தெரிந்து கொள்ள இவ்விடத்தில் எலியின் இடது பொத்தானை அழுத்தவும் (Press the left button of your mouse here)
நிகழும் ஜய வருடம் ஆடி மாதம் 19 நாள் மூன்றாவது சனிக்கிழமை காலை பத்து மணியளவில்(July 19 2014 3rd Saturday 10 AM) வளலாய் மக்களின் வருடாந்த ஒன்றுகூடல் வழமையாக நடைபெறும் திடலில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கனடா வாழ் வளலாய் உறவுகள் அனைவரையும் (குறிப்பாக மொன்றியோல் வாழ் உறவுகளையும்) ஒன்றுகூடலில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அண்மைச் செய்திகள் :க.பொ.த.(சா/த) பரீட்சையில் சிறப்பாக தேறிய வளலாய் மாணவர்கள் விபரம், வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மீண்டும் ஆரம்பம், இ.ப.மா.ச. ஆல் நடாத்தப்பட்ட மருதன் மற்றும் புத்தாண்டு தினப் போட்டிகளின் நிழற்படங்கள், 2013 - 2014 நிதியாண்டில் பணம் கொடுத்தவர்கள் விபரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது

தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங்கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படு கின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப் படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணிகள் என்பனவற்றை நிர்வகித்தமை க்கான வரலாறுகளைக் கொண்டது  எமது வளலாய் கிராமம். ஆரம்பகால கிராமநிர்வாகம் பற்றிக் குறிப்பிடும்உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல் சார்ந்த இடமாகப் பாக்கு நீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன.            மேலும் படிக்க...

தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்பு க்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக்கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள்.       மேலும் படிக்க...

இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபிரனரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி  இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களை அரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்ப தோடு, பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார்.  மேலும் படிக்க...

தன்னார்வல மக்கள் குழுக்கள்...

கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள்

தலைவர் : கணபதிப்பிள்ளை கருணாமூர்த்தி B.Sc.
செயலாளர் : கிருபாகரன் ஏகாம்பரம் M.Sc.(Eng.)
பொருளாளர் : சின்னத்தம்பி சிவபாலன்

அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்

தலைவர் - சண்முகநாதன் ஞானரூபன்
செயலாளர்-வடிவேல் யோகநாதன்
பொருளாளர்-தாமோதரம் நந்தகுமார்
உபதலைவர்-செல்லையா தங்கராசா
உபசெயலாளர்-கிருஷ்னபிள்ளை சிவயோகம்
கணக்காய்வாளர்-நாகலிங்கம் மகேந்திரம்
நிர்வாககுழு உறுப்பினர்கள்
வைரமுத்து கந்தசாமி
கிருஷ்னபிள்ளை குமரகுருலிங்கம்
தம்பிராசா அருளானந்தம்
கணபதிப்பிள்ளை தங்கவேல்
நாகலிங்கம் சத்தியநாதன்
திருநாவுக்கரசு மகேந்திரம்
சிதம்பரப்பிள்ளை கதிர்காமர்
சிதம்பரப்பிள்ளை பாலசுப்பிரமணியம்
வீரகத்திபிள்ளை சிவசுப்பிரமணியம்


வளலாய் பெரிய நாகதம்பிரான் கோவில் அறங்காலர் சபை உறுப்பினர்கள்

தலைவர் : செல்லப்பு ராசரத்தினம்
உபதலைவர் : தம்பிராசா அருளானந்தம்
செயலாளர் : கிருஷ்ணபிள்ளை குமரகுருலிங்கம்
பொருளாளர் : கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்

வளலாய் மேற்கு மீள்குடியேற்ற செயற்குழு உறுப்பினர்கள்

தலைவர் : செ. துரைரத்தினம் சமாதன நீதவான்
(Whole Island)
செயலாளர் எஸ். குமரகுருலிங்கம்
பொருளாளர் : எஸ் சிவேஸ்வரன்

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தால் 2014 ல் நடாத்தப்பட்ட புதுவருட தின போட்டிகளின் நிழற்படங்களை பார்வையிட இங்கே 'களிக்' கவும் தகவலை வளலாய் முகநூலில் பகிர்ந்து கொண்டவர் சந்திரசேகரம் கோகுலன்.
வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை தொடர்புடைய செய்திகளை பார்வையிட இங்கே 'கிளிக்'கவும்
முழுவதையும் படிக்க இங்கு சொடுக்குக
வளலாயை வலம் வர
சுதா குமரனின் வளலாய் கவிதைகளை படிக்க இங்கு
வளலாய் மென் ஊடகமொன்றில் பகிரப்பட்ட முருகையா பானுகோபன் செருகேட்டிலிருந்து (Album) கிடைத்த இடைக்காடு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் சித்திரை புது வருடத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்த மரதன ஓட்டப் போட்டியின் போது எடுக்கப்பட்ட நிழங்படங்களைப் பார்வையிட இங்கு 'கிளிக்' கவும்
வளலாய் பிள்ளையார் கணக்குகளுக்கு இங்கு சொடுக்கவும்
பங்குனி 26 ம் நாள் (March 26 2014) சிவபதம் அடைந்த திரு கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் அவர்களின் துயர்பகிர்வை பார்வையிட இங்கு சொடுக்கவும்
திரு நல்லதம்பி சற்குணநாதன், முதலாவது ஆண்டு நினைவு வணக்கம், திதி - 26.03.2014. (ஏகாதசி), விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்